Two Days Workshop – Tally with GST

Description


குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையும், வணிகவியல் துறையும் இணைந்து, கல்லூரியின் வணிகவியல் துறையில் பயிலும் 300 மாணவ, மாணவியர்களுக்கு டேலி மென்பொருள் வழியாக ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கையாளும் பயிற்சியை செய்முறை விளக்கத்துடன் 05.08.2019 மற்றும் 06.08.2019 ஆகிய நாட்களில் வழங்கியது.

இதில் பன்முகமுடைய பிரபல பட்டய கணக்காளரும், எழுத்தாளரும், நிதிஆலோசகரும், பயிற்சியாளரும், முகநூலில் சிறுதொழில்முனைவோர் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு. வெற்றிவிடியல் பி. ஸ்ரீனிவாசன் அவர்களும், சென்னையை சார்ந்த பிரைன் குரூப் அகாடமியின் நிறுவனர் திரு. சங்கர் சந்துரு அவர்களும், போடியம் நிறுவனத்தின் தலைவர் திரு. வெங்கட்ரமணா ஜோதிபாபு அவர்களும், மாணவ, மாணவிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் டேலி மென்பொருள் வழியாக சரக்கு மற்றும் சேவை வரியை கையாளும் யுக்தியையும் கற்று கொடுத்தனர். மேலும் வணிகவியல் துறை மாணவ மாணவிகள் பட்டயக் கணக்காளராக இந்த திறன் எவ்வாறு கை கொடுக்கும் என்பதையும் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பெருநிறுவன சமுக பொறுப்பின் கீழ் சென்னை ஆக்சிவிட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. முகமது ஹனிபா அவர்களும், ஈரோடு நித்தின் பங்கு நிறுவனத்தின் உரிமையாளர் திரு ஸ்ரீதரன் அவர்களும், மை கிராக்கர்ஸ் நிறுவன உரிமையாளர் திரு. அபிலாஷ் அவர்களும் நிதி ஆதரவு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் முனைவர். பி. சரஸ்வதி அவர்கள் துவக்கிவைத்து அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் தொழில்துறை உறவுகளின் தலைவர் முனைவர். ஸ்ரீஜித் விக்னேஷ் அவர்கள் செய்திருந்தார், மேலும் அவர் பயிற்சியாளர்களுக்கும் நிதி ஆதரவளித்த நிருவனகளுக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் உள் தர உத்தரவாத அமைப்பின் உறுப்பினரும், வணிகவியல் துறை தலைவருமான திருமதி. ரங்கநாயகி அவர்களும், மூத்த பேராசிரியர் திருமதி. ஷீலாராணி அவர்களும் மற்றும் வணிகவியல் துறையை சார்ந்த பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

 

Galleries

Start Time

10:00 am

Monday, August 5, 2019

Finish Time

4:00 pm

Tuesday, August 6, 2019

Address

College Campus